கொழும்பை அண்மித்த பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பை அண்மித்த பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு குறித்து தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜா- எல, வத்தளை-மாபோல, சீதுவ ஆகிய நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி மணிமுதல் திங்கட்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த நகர சபைகளின் எல்லைக்கு உட்பட்ட ராகம, வெலிசர, கெரவலபிட்டிய, உஸ்வேட்டகெய்யாவ, டிக்கோவிட்ட, வல்பொல, பட்டுவத்த, ஹொரப்பே, ஜயசிறிகம ஆகிய பகுதிகளில் இந்த 24 மணிநேர நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

அவசர திருத்த வேலைகள் காரணமாக நீர்வெட்டு அமுல் செய்யப்பட இருப்பதாக குறிப்பிட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, போதிய நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு பாவனையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


Recommended For You

About the Author: Editor