கூகுள் நிறுவனம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு!!

அரசியல் விளம்பரங்களுக்கு கூகுள் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை வித்துள்ளது.

இதற்கமைய பயனீட்டாளர்களின் அரசியல் விருப்பம் அல்லது பொது வாக்காளர் பதிவு ஆவணம் ஆகியவற்றின் அடிப்படையில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்படவுள்ளது.

வாக்காளர்களின் வயது, பாலினம், அஞ்சல் குறியீட்டு எண் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது.

எனினும், தற்போது குறிப்பிட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டு செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் எதிர்வரும் வாரம் முதல் இந்த புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய நாடுகளிலும் புதிய விதியை நடைமுறைப்படுத்த கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் குறித்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor