வடமாகாண ஆளூநர் யார் ?

வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் சகல தரப்புகளும் முன்வைத்த பரிந்துரைகளைப் பரிசீலித்து பொருத்தமானவரை நியமிப்பேன் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நியமிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரைப்பவரை பரிசீலிக்க முடியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் நேரில் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், முன்னாள் ஆளுநரும் யாழ்.கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) ஜி.ஏ.சந்திரசிறி, கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன், ஈபிடிபியின் மூத்த உறுப்பினர் சி.தவராசா, முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எனினும் இதுதொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதி கோத்தாபய பொருத்தமான நபரை வடக்கு மாகாண ஆளுநரை நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்