இங்கிலாந்தை காலி செய்த ஆஸி..!!

உலக கோப்பை தொடரில் 64 ரன்களில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.

உலக கோப்பை தொடர் 32வது லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்சில் இந்த போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், பின்ச் நிதானமாக விளையாடி அணிக்கு நிலையான தொடக்கத்தை ஏற்படுத்தினர். டேவிட் வார்னர் 53 ரன்களுக்கும், ஆரான் பின்ச் 100 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பவுலிங்கில் ஆதிக்கம்

பவுலிங்கில் ஆதிக்கம்

அடுத்தடுத்து வந்த வீர்ரகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆகையால், அதிரடியாக 330 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் இங்கிலாந்து பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியது. இதையடுத்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை எடுத்தது.

ஓப்பனிங்கே ஷாக்

ஓப்பனிங்கே ஷாக்

286 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 2வது பந்திலேயே ஜேம்ஸ் வின்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பெயர்ஸ்டோவ் 27 ரன்களுக்கும், ஜோ ரூட் 8 ரன்களுக்கும், மார்கன் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். முக்கிய வீரர்கள் தொடக்கத்திலேயே… அதாவது 10 ஓவர்களுக்குள்ளாகவே காலியாகினர்.

கலக்கிய ஸ்டோக்ஸ்

கலக்கிய ஸ்டோக்ஸ்

பின்னர் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார் ஸ்டோக்ஸ். எனினும் 37வது ஓவரில் ஸ்டார்க் பந்தில் 89 ரன்களில் ஆட்டமிழக்க, மெல்ல, மெல்ல இங்கிலாந்து முகாம் நம்பிக்கை இழக்க ஆரம்பித்தது. இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

221 ரன்களில் ஆல் அவுட்

221 ரன்களில் ஆல் அவுட்

கடைசியாக இங்கிலாந்து 45வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா, 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

செமி பைனலில் ஆஸி.

செமி பைனலில் ஆஸி.

அந்த அணி சார்பில் பெஹண்டரப் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 12 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.


Recommended For You

About the Author: Editor