
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
கட்சியின் பதில் தலைவர் ரோஹன லச்மன் பியதாஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் சுகததாஸ அரங்கில் கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்தநிலையிலேயே குறித்த வெற்றிடங்களுக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் பதில் தலைவர் ரோஹன லச்மன் பியதாஸ குறிப்பிட்டுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இதுதொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.