
‘பிட்ச் ரேட்டிங்’ இனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து இலங்கை மத்திய வங்கி கண்டனம் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் தொடர்பாக ‘பிட்ச் ரேட்டிங்’ அண்மையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது.
இந்த அறிக்கையில் உண்மைக்கு புறம்பான சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதும் இலங்கையின் பொருளாதாரத்தில் பல சிறந்த குறியீடுகள் காட்டப்பட்டன.
குறிப்பாக கொழும்பு பங்குச்சந்தையில் உயர்ச்சி ஏற்பட்டது. ஏனைய துறைகளிலும் முன்னேற்றங்கள் உணரப்பட்டன.
எனினும் ‘பிட்ச் ரேட்டிங்’ இதற்கு மாறான கருத்தை வெளியிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.