
யாழ்.வல்வெட்டித்துறை தீருவில் மைதானத்தில் மாவீரா் நாள் நெருங்குவதால் வல்வெட்டித்துறை நகரசபையினால் அங்கு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அங்கு சென்ற பொலிஸாா் துப்புரவு பணிகளை தடுத்து நிறுத்தியயதோடு , பணிய்ல் ஈடுபட்டவர்களை எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் மாவீரா்களை நினைவுகூர அனுமதி இல்லை எனக்கூறிய பொலிசார் , அதன் பின்னா் நகரசபைக்கு சென்று நகரசபை செயலாளரை சந்தித்து விளக்கம் கோாியுள்ளனா்.
இதன்போது நகரசபை தலைவாின் ஏற்பாட்டிலேயே துப்புரவு பணிகள் இடம் பெறுவதாக செயலாளா் கூறியதை தொடா்ந்து பொலிஸாா் அங்கிருந்த சென்றுள்ளனர்.
அத்துடன் தீருவில் வெளியில் பொலிஸாரை குவித்து துப்புரவு பணிகளை நிறுத்தியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.