செவ்வாயில் வாழ்ந்தால் மனநோய் ஏற்படும் ?

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் டிமென்சியா என்ற மனநோய் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகளை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் படிப்படியாக சுயநினைவை இழந்து டிமென்சியா எனும் நாள்பட்ட மனநோய் ஏற்படலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முற்பட்டால் முதல் பிரச்சினையாக இருப்பது சுகாதார குறைபாடுகள் தான். அவற்றில் மிக முக்கியமானது என்னவென்றால், உலோகம், பிளாஸ்டிக் மற்றும் மனிதத்தோல் வழியாக பயணிக்கும் திறன் கொண்ட அதிக அளவு கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்துவதுடன் கடுமையான அறிவாற்றல் குறைபாடுகளையும் ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கு கதிர்வீச்சின் மூலம் சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த டிமென்சியா நோய் பாதிப்பு இருப்பதாக அமெரிக்க மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை செவ்வாய் கிரகத்தில் பூச்சிகள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக பூச்சியியல் துறையைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தைச் சுற்றும் ரோவர் மூலம் பூச்சிகள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தேனீ, வண்டு போன்ற உயிரினங்கள், ஊர்வன ஆகியவற்றின் படிமங்கள் தெரிவதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவே தெரிகிறமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்