அமெரிக்காவின் போரில் பிரித்தானியா இணைந்துகொள்ளாது: ஹண்ட்!

ஈரான் மீதான யுத்தத்தில் இணையுமாறு அமெரிக்க பிரித்தானியா கோரிக்கை விடுக்குமென தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டாலும் பிரித்தானியா அதை ஏற்றுக்கொள்ளாது எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவிவரும் பதற்றம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. ஈரானுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றம் குறித்து கருத்து தெரிவித்த ஹண்ட்,

அமெரிக்கா எங்களது நெருங்கிய நட்பு நாடு, அவர்களோடு நாங்கள் எந்நேரமும் தொடர்பில் இருக்கிறோம், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை கருத்திற்கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது.

ஆனால் ஈரானுக்கு எதிரான போரில் இணையுமாறு பிரித்தானியாவிடம் அமெரிக்கா கோரிக்கையை முன்வைப்பதையோ பிரித்தானியா அதை ஏற்றுக்கொள்வதையோ என்னால் கற்பனை செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor