முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடலுக்கு கௌரவம்

காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடலுக்கு கௌரவம் செலுத்தும் வகையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) இவ்வாறு அவரது பூதவுடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டுவரப்படவுள்ளது.

பிற்பகல் ஒரு மணியிலிருந்து 3 மணிவரை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளது.

பூதவுடலுக்கு கௌரவம் செலுத்துவதற்காக வருகை தரவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், உறவினர், நண்பர்கள் பகல் 12.30க்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு வருகை தரவேண்டும் என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்