ஞானசார-மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இரண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவித்தமையினாலேயே குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட மற்றும் மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor