ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய முழு நீதிமன்ற அதிகாரத்துடன் கூடிய விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தற்போதும் பாதிக்கப்பட்டவர்களிடம் கடும் சந்தேகம் மற்றும் தௌிவற்ற நிலை காணப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதியிடமும் மற்றும் முன்னாள் பிரதமருடனும் குறித்த தாக்குதல் தொடர்பாக முழு நீதிமன்ற அதிகாரம் கொண்ட விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரியிருந்தார். எனினும் அதற்கு உரிய பதில் கிடைக்வில்லை.

அது தொடர்பாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தேர்வுக் குழு தொடர்பாக பேராயர் கர்தினால்கூட திருப்தி அடையவில்லை.

அதன்படி, எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கும் சார்பற்ற சுயாதீன, நம்பிக்கையுடைய மற்றும் அது தொடர்பாக அனுபவம் நிறைந்த சுயாதீன நபர்களை கொண்ட முழு நீதிமன்ற அதிகாரத்துடன் கூடிய விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும்” என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.


Recommended For You

About the Author: Editor