எதிர்க்கட்சி தலைவராக சஜித்த நியமிக்க கோரி கடிதம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைரவராக நியமிக்கமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்