6 மாகாணங்களுக்கான ஆளூநர்கள் நியமிப்பு.

6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்பாக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்படி 6 மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம்,

மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல
மத்திய மாகாணம் – லலித் யு கமகே
ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே
தென் மாகாணம் – டொக்டர் வில்லி கமகே
வடமேல் மாகாண – ஏ.ஜே.எம் முஸம்மில்
சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ

என 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லையென்பது சுட்டிக்காட்டத்தக்கது.

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

இதனையடுத்து வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

அந்தவகையில் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், மத்திய மாகாண ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, கிழக்கு மாகாண ஆளுநர் விஜயலால் டி சில்வா, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர்பசேல ஜயரத்ன சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க ஆகியோர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்