நாட்டின் பாதி மாவட்டங்களுக்கு மேல் செம்மஞ்சள் எச்சரிக்கை!

இன்று செவ்வாய்க்கிழமை நாட்டின் பாதி மாவட்டங்களுக்கும் மேல் அதிகபட்ச வெயில் நிலவும் என தெரிவிக்கப்பட்டு, செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை, நாளை புதன் மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் கடும் வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக 40°c வரை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 53 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. இது தொடர்பான செய்திகளை முன்னதாக வெளியிட்டிருந்தோம்.

இன்று செவ்வாய்க்கிழமை பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் அதிகபட்சமாக 35°c வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்றைய நாளில் அதிகபட்ச வெயில் Grenoble இல் பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இங்கு 39°c வெப்பம் பதிவாகும்.

இன்றைய நாளில் பதிவாக உள்ள குறைந்த பட்ச வெப்பம் 20°c என்பதும் குறிப்பிடத்தக்கது.

Normandy இல் இந்த வெப்பம் (20° இல் இருந்து 22°c வரை பதிவாகக்கூடும்) பதிவாக உள்ளது.


Recommended For You

About the Author: Editor