பரிசுக்குள் போக்குவரத்தில் மாற்றம்!!

இவ்வாரத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தின் போது வாகன சாரதிகளால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கான புதிய போக்குவரத்து திட்டம் ஒன்றை சுற்றுச்சூழல் அமைச்சகம் (Ministry of Ecological Transition) நேற்று திங்கட்கிழமை ஜூன் 24 ஆம் திகதி வெளியிட்டுள்ளது.

இதன்படி, 24 மணிநேரத்துக்குள் ஒரு கன மீற்றர் பரப்பளவில் 80 மைக்ரோகிராம் வளிமண்டல மாசடைவு ஏற்பட்டால் உடனடியாக போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது 48 மணிநேரத்தில் 50 மைக்ரோகிராமுக்கு மேல் வளிமண்டல மாசடைவு ஏற்படும் பட்சத்தில் இந்த போக்குவரத்து மாற்றம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Crit’Air ஒட்டிகள் குறித்து வாசகர்கள் அறிந்தது தான். இதில் 0 இல் இருந்து 2 வரையான இலக்கங்கள் கொண்ட வாகனங்கள் மாத்திரமே இவ்வாரத்தில் பரிசுக்குள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆம், 4 ஆம், 5 ஆம் வகையைச் சேர்ந்த அதிகளவான மாசடைவை ஏற்படுத்தும் வாககங்களுக்கு முற்றாக தடை விதிக்கப்படும்.

எரிசக்தி மாற்றம் அமைச்சர் (Minister of Energy Transition) François de Rugy, நேற்று திங்கட்கிழமை காலை குறிப்பிடும் போது, மிக வேகமாக இந்த மாற்றம் கொண்டுவரப்படும் என குறிப்பிட்டார்


Recommended For You

About the Author: Editor