
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தனது வாக்கை பயன்படுத்தினாரா? என்பது தொடர்பில் சந்தேகம் எழுத்துள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க சந்தேகத்தை தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது வாக்கை பயன்படுத்திய, ரணில் விக்கிரமசிங்க, வாக்குச்சீட்டில் மேலேயே இருந்த சின்னமொன்றுக்கே தனது வாக்கை அளித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஜனநாயகக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, பிரதமர் ரணில் விக்கரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள், கடுமையான சூழ்ச்சிகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அனுரகுமார திஸாநாயக்க இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.