காற்றை மாசுபடுத்திய குற்றத்திற்காக 29 விவசாயிகள் கைது

பயிர்க் கழிவுகளை எரிந்த 29 விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி, உ.பி., பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வேளாண் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் டெல்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அரசு அறிவுறுத்தலின் பேரில் பயிர் கழிவுகளை எரிப்பதை விவசாயிகள் நிறுத்தியதால், 2 நாட்களுக்கு முன்னர் டெல்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இன்று (புதன்கிழமை) மீண்டும் மோசமான நிலைக்கு காற்றின் தரம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்று மாசு தொடர்பான வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்றம் காற்று மாசை அதிகரிக்க செய்யும் வகையிலான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் உ.பி.இயில் 29 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயிர்க் கழிவுகள் எரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காற்று மாசு தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இதுவரை 13.05 இலட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொர்பாக இதுவரை 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காற்று மாசு தொடர்பாக விவசாயிகள் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையென்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்