நான்கு மாதம் காபந்து அரசு – மார்ச் பொதுத் தேர்தல்

நான்கு மாத கால இடைவெளிக்குள் பொதுத் தேர்தலை நடத்துவது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதுவரை கோத்தாய ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமித்து ஆட்சியை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கோத்தாபய ராஜபக்ச, ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தினார்.

இதன்போது ஜனாதிபதியின் கீழ் அரசை முன்னெடுப்பதும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்வது தொடர்பாகவும் இருவரும் பேச்சு நடத்தினார்
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசு பதவி விலகி நாடாளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், நான்கு மாதகால இடவெளிக்குள் பொதுத் தேர்தலை நடத்தும் வரை காபந்து அரசை நியமிப்பது என்று இணக்கம் காணப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச தெரிவானதையடுத்து அன்றைய தினம் இரவு அமைச்சரவையை ரணில் விக்கிரமசிங்க கூட்டியிருந்தார். அதன்போது அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்வது என கூட்டணிக் கட்சிகள் உள்பட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தனர்.

அத்துடன், நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் நாடாளுமன்றை வரும் மார்ச் முதலாம் திகதிவரை கலைக்காமல் எதிர்கட்சியாகச் செயற்படுவோம் என்று தெரிவிக்கப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்