விக்னேஷ் சிவனுடன் பிறந்தநாள் கொண்டாடின நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது 35ஆவது பிறந்தநாளை அமெரிக்காவில் கொண்டாடினார். திரையுலகினர், இரசிகர்கள் என பலரும் அவருக்குச் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நியூயோர்க்கில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் நயன்தாரா. இது தொடர்பான ஒளிப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் தளத்திலும் நயன்தாரா தனது ருவிற்றர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.

விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம், பிகில் என இந்த வருடம் நயன்தாரா நடித்த ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. ரஜினி நடிக்கும் தர்பார் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ள நயன்தாரா, அடுத்ததாக இரு படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாராவின் 65வது படமான நெற்றிக்கண்ணை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


Recommended For You

About the Author: ஈழவன்