20.11.2019 இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். வீண் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புகழ் பெறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: பழைய பிரச் சினைகளுக்கு தீர்வு காணும் வழி களைக் கண்டறிவீர்கள். தாய் மற்றும் உறவினர்களுடன் வீண்விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரரின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: உங்கள் முயற்சிகளால் முன்னேற்றப் பாதையில் செல் வீர்கள் உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிரபலங் களின் நட்பால் நன்மை விளையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றி கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் இதுவரை இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உங்களது முகம் பொலிவு பெறும். தள்ளி போன விஷயங்கள் உடனே முடியும். புதிய நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களின் இனிமையான பேச்சால் அனைவரையும் கவரு வீர்கள். எதிர் பாராத மாற்றம் ஏற்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில காரியங்களைப் போராடி முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால்பொறுமை தேவை. உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. நேர்மறை சிந்தனை தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: உங்கள் செயல்பாடுகளில் வீண் அலைச்சலும், தடைகளும் உண்டாகும். வாகனப் பயணங் களில் கவனம் தேவை. வியாபாரத் தில் வாடிக்கை யாளர்களிடம் விவாதம் வேண்டாம். உத்தி யோகத்தில் மேலதிகாரியுடன் அனுசரித்துச் செல்லுங்கள். போராடி வெற்றி பெறும் நாள்.

துலாம்

துலாம்: மூத்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள்செயல்பாடுகளால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் இரசனையை புரிந்து கொண்டு, அதன் படி செயல்பட்டு லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையால் உயர் அதிகாரியின் பாராட்டினைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: : சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு,சுளிவுகளை கற்று அதனால் ஆதாயம் அடைவீர்கள். சொந்த, பந்தங்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உங்களால் வளர்ச்சி அடைந்த சிலரை நீங்கள் சந்திக்க நேரிடும்.

தனுசு

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் தொடர் வதால், எந்த விஷயத்திலும், தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். உடல் நிலையில் சிறு பாதிப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில தடைகள் உருவாகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். எதிர் பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

கும்பம்

கும்பம்: நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். உங்களுடைய அறிவு ஆற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வாகனத்தைச் சரி செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்களால் வியாபாரம் பெருகும் . உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும் திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம்

மீனம்: நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங் களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள், மற்றும் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி முன்னேறுவீர்கள்.


Recommended For You

About the Author: Editor