வவுனியாவிற்கு கேரள கஞ்சா கடத்தல்- ஒருவர் கைது!!

யாழில் இருந்து வவுனியா நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்திசென்ற ஒருவரை வவுனியா போதை தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரை வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் கடமையில் இருந்த பொலிசார் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த இளைஞரின் பயண பொதியில் இருந்து 2 கிலோ 800 கிராம் எடையுடைய கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பிரசன்ன வெலிகலவின் வழிகாட்டலில் போதை தடுப்பு பிரிவின்உப பொலிஸ் பரிசோதகர் ஞானசிறி தலைமையில்,ஆறு பேரைக் கொண்ட பொலிஸ்குழுவினரால் மேற்கொள்ளபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor