சுதந்திரக்கட்சியின் அதிரடி முடிவு!!

கட்சியின் தீர்மானத்தை மீறி ஜனாதிபதி தேர்தலில் வேறு வேட்பாளர்களை ஆதரித்த சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்க சிறிலங்கா சுதந்திரக்கட்சி அதிரடியாக முடிவெடுத்துள்ளது.

முன்னாள் சந்திரிகா குமாரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜித் விஜிதமுனி சொய்சா, ஏ.எச்.எம்.பௌசி, எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோரே ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளாகின்றனர்.

அத்துடன், கட்சி முடிவை மீறிய மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் ரோஹண லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor