எரிவாயு சேவைகளை மேலும் மேலும் பலப்படுத்த €700 மில்லியன் நிதி..!!

பரிஸ் மற்று இல்-து-பிரான்சுக்குள் எரிவாயு சேவைகளை பலப்படுத்த €700 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 12 ஆம் திகதி rue de Treviso வீதியில் எரிவாயு கசிவினால் விபத்து ஏற்பட்டு நால்வர் சாவடைந்தனர். அதைத் தொடருந்து எரிவாயு வழங்குனர்களான GRDF, எரிவாயு தொடர்பான பாதுகாப்பை பலப்படுத்த முயற்சி செய்து வருகின்றது.

இந்நிலையில், எரிவாயு வழங்குவது தொடர்பான பாதுகாப்பினை அடுத்த 15 வருடங்களுக்கு உறுதி செய்ய இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை பாதுகாப்பை உறுதி செய்யவும், விஸ்ததிக்கவும் இந்த ஒப்பந்தத்தை GRDF நிறுவனம் பரிஸ் நகரசபையுடன் இணைந்து கைச்சாத்திட்டுள்ளது.

அதேவேளை, எரிவாயு குழாய்களை வீட்டின் சுவற்றுக்கு உட்பக்கமாகப்கொண்டு செல்ல முடியுமா என தாம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.


Recommended For You

About the Author: Editor