ரஜினி சொன்ன ‘அதிசயம்’ குறித்து கமல்ஹாசன் கருத்து

பொது மேடையிலோ அல்லது செய்தியாளர்களின் பேட்டியிலோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே ஒரு வார்த்தை சொன்னால் கூட போதும், அது ஊடகங்களுக்கு ஒரு வாரம் தீனி போடும், அந்த வகையில் ‘கமல்ஹாசன் 60’ விழாவில் ரஜினிகாந்த் கூறிய அதிசயம்-அற்புதம் ஆகிய இரண்டு வார்த்தைகள் தமிழக அரசியல்வாதிகளுக்கு கிலியையும் ஊடகங்களுக்கு தீனியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுவரை ரஜினியை அதிமுகவின் மறைமுக ஆதரவாளர் என்று கூறப்பட்ட முத்திரையும் உடைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் பேசிய அதிசயம் குறித்து இன்று டாக்டர் பட்டம் பெற்ற கமல்ஹாசன் கூறியதாவது:

ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்; தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்று கூறினார்

மேலும் இலங்கையில் புதியதாக பதவியேற்றுள்ள கோத்தபய குறித்த கேள்விக்கு ‘நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை’ என்று தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor