கமலுடன் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!

வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு வலுவான திராவிட கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து இரண்டு திரையுலக ஜாம்பவான்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் எதிர்த்து போட்டியிடவுள்ளனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தனித்தனியே போட்டியிட்டால் திராவிட கட்சிகளுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரியும் என்றும் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சற்றுமுன் ரஜினியுடன் இணைய தயார் என்றும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்றும் தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்று கமல்ஹாசன் பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் கோவா செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினியுடம் கமல் கட்சியுடன் கூட்டணி சேர்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘மக்களின் நலனுக்காக, நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்’ என்று கூறினார்.

மேலும் தனது அதிசயம் குறித்த பேச்சுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்கு பதில்கூற விரும்பவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்.


Recommended For You

About the Author: Editor