*ஆம்பல்* பாகம் 2

*ஆம்பல்*

( பாகம் 2 )

🌸🌸🌸🌸🌸

(தேன்குழலி தனது வாழ்க்கையை பின்னூட்டத்திற்கு கூட்டிச் செல்கிறார் சரவணனை).

வறுமையின் பிடியில் பசியின் கொடுமையிலும் தினம்தோறும் வாழ்ந்து தவித்த காலங்கள் தான் அதிகமாக இருந்தது எனது இளம் வயதில் இருப்பினும் சொர்கம் எங்கள் வீடு அப்பா அம்மா அக்கா நான் தம்பி இதுவே எங்களின் குடும்பம் தந்தையின் பாசத்தில் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்த எங்கள் குடும்பம்.

படிப்பறிவே இல்லாத குடும்பத்தில் பிறந்து எங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தார் எனது அப்பா

கண்டிப்பும் கருணையும் முழு உருவம் என்னுடைய அம்மா அம்மாவின் உடன்பிறப்பு ஒரே ஒரு தம்பி பாசத்தின் மறு உருவம் அவர் எங்கள் மேல் அதிக பிரியம் உள்ளவர் . அத்தையும் அப்படித்தான் அவர்களுக்கு நாங்கள் தான் குழந்தைகள்

ஓட்டு வீடு உடையாத கூரை ஒளிந்து விளையாடும் சிட்டுக்குருவிகள் திரும்பிய பக்கமெல்லாம் ஒட்டடை பிடித்தவர்கள் சுபர்கள்

வீட்டின் பின்புறம் மலர் தோட்டம் தோட்டத்தின் நடுவில் விளையாடிக்கொண்டிருந்தாள் தேன்குழலி

மிகவும் கெட்டிக்காரி என்ற பெயரையும் அமைதியான பெண் என்ற பெயரில் அக்கா அமுதவல்லி கிடைத்தது

தம்பி பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் சுறுசுறுப்புடனும் எந்த நேரமும் விளையாட்டுத்தனம் இருந்துகொண்டேதான் இருக்கும்

அது ஒரு மாலை நேரம் என்பதனால் வேலை முடித்து வீட்டிற்கு வந்தார் அப்பா அனைத்து குழந்தைகளும் தங்கள் அருகே வந்து நிற்க எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து வந்தாலும் மூன்று குழந்தைகளை பார்த்தவுடன் அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி மனைவியை பார்க்கும் போது உடம்பில் ஒரு தெம்பு எல்லாம் ஒன்று திறந்து தன மனக்கவலையை போக்கும் வகையில் தன் குடும்பம் இருக்கிறது என்ற மகிழ்ச்சியில் வந்தார் தேன்குழலி அப்பா ராமன்

ராமருக்கு செல்லப்பிள்ளை என்பதனால் என்ன கேட்டாலும் வாங்கித் தரும் நிலையில் இருந்து கொண்டுதான் இருந்தார் இருப்பினும் தாயின் கட்டுப்பாடு கண்டிப்போம் அதிகமாகவே இருந்தது

நாம் படும் கஷ்டத்தை நம் பிள்ளைகள் உணரவேண்டும என்று கோவமாக சொன்னால் ராதா கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்விக்க நினைக்கிறீர்கள் ஆனால் அவர்களுக்கு அது தெரிய மாட்டேங்குது என்றால் மனைவி ராதா

சரி விடுமா குழந்தைங்க ஆசைப்படுகிறார்கள் இதை நிறைவேத்தி வைக்கிறதுக்கு தான் நானும் நீயும் இருக்கின்றோம் என்றார் ராமர் இவர்கள் இடையே பேசிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் மகள் தேன்குழலி வந்தாள் அப்பா நான் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா என்று ஒரு கேள்வி கேட்டால்

இருவருக்குமே வேலையில்லை எதையாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் அதுதான் உங்கள் வேலையை நீங்கள் குளித்துவிட்டு வாருங்கள்

வாழ்நாளில் மகிழ்ச்சி என்று ஒன்று இருப்பது என்னவென்றால் குழந்தைகளுடன் உரையாடும் போது மட்டுமே ராமரின் மிகப்பெரிய செயலாகும்

அப்படி இருக்க ஒரு சூழ்நிலையில் ராமருக்கு வெளியூரில் வேலை ஒன்று கிடைத்தது அங்கேயே தங்கி வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர் நல்ல சம்பளம் என்பதனால் அவரும் சம்மதித்தார்

பிள்ளைகளை எப்படி விட்டு பிரிவது என்று மனமுடைந்து மனைவியிடம் கேட்டார் மனைவியோ நான் உங்களை விட்டு பிரிந்து இருப்பேன் என்று சொன்னார் ராதா

சரி சாப்பாடு எடுத்து வைக்கிறேன் குளித்துவிட்டு வாருங்கள் அனைவரும் சாப்பிடலாம் என்று கண்டிப்புடன் தெரிவித்தார் ராதா

ஒரு தட்டு நிறைய சாப்பாடு போட்டு கொண்டு வந்த ராதா இவர்களிடையே ஒரு பழக்கம் உண்டு ஒன்று ஒரு வேளை மட்டும் ஒரு தட்டில் சாப்பிடுவார்கள் அப்பா பிசைந்து சாப்பாட்டை ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு உருண்டையாக பிடித்து அனைவருக்கும் குடும்ப அல்லது ஊட்டி விடுவார் மனைவி உட்பட இது இவர்களது வழக்கம் இரவு சாப்பாடு முடிந்து படுக்கையறை சென்றார்கள் அனைவரும்

படுக்கை விரிக்கப் பட்டுள்ளது அனைவரும் படுத்துவிட்டு அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர் அன்று நடந்த சம்பவங்களை இரவில் படுக்கையின் போது பேசிக்கொள்வது அவர்களது வழக்கம் முதலில் மூத்தவள் எனக்கு பள்ளிக்கூடம் போவதற்கு விருப்பம் இல்லை என்றால் ஏன் என்று கேட்டதற்கு சரியான உடை இல்லை அலங்காரம் செய்வது கூட பொருட்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டே அழுது விட்டாள் அமுதவல்லி

கவலை கொள்ளாதே புது உடைகள் அலங்காரப் பொருட்கள் வாங்கித் தருகிறேன் என்று ராமர் மீண்டும் ஒருமுறை சொன்னார்

அடுத்து கடைக்குட்டி கேட்டான் எனக்கு ஒரு சைக்கிள் வேண்டும் என்று அதற்கும் தலையசைத்தார் ராமர்

தந்தையின் நிலை புரிந்தது அமைதியாக இருந்தாள் தேன்குழலி இவளுக்கு அமைதி என்பது மிகவும் பிடித்தது மனதில் ஆழ்ந்த சிந்தனைகளும் மற்றவர்களிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகளும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் மீண்டும் தந்தையை பார்த்து அதே கேள்வி நாம் கட்டப்படுவதற்கு என்ன காரணம் என்று மீண்டும் ஒருமுறை அவரைப் பார்த்து கேட்டாள்

ராமர் அவருக்கு பதிலளிக்க ஆரம்பித்தார் நானும் படிக்காதவன் கூலி வேலை செய்பவன் எனக்குத் தெரிந்ததை நான் செய்து உங்களை பார்த்துக்கொள்கிறேன் தோட்டத்தில் இருக்கும் மலர்கள் காய்கறிகள் இதையும் விற்பனை செய்து உங்களது படிப்பு செலவுகளை பார்த்துக் கொள்கிறேன் இருப்பினும் வறுமையின் பிடியில் நாம் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறோம் ஒருவேளை நான் படித்திருந்தார் நல்ல ஒரு வேளையில் நல்ல சம்பளத்தில் இருந்திருக்கலாம் என்று கவலையுடன் தெரிவித்தார் இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கையை காத்து இருக்கிறேன் என்றான் ராமன்

நீங்களாவது படித்து நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணமாகும் அதனால் அனைவரும் நன்றாக படியுங்கள்

வாழ்க்கையில் யாருக்காவது உதவ வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் ஒரு குழந்தையை படிக்க வையுங்கள் நீங்கள் மூவருக்கும் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு என்றார் ராமர்

ஏனென்றால் எனது அப்பா என்னை படிக்க வைக்கவில்லை ஆகையால்தான் என் சக்தியையும் மீறி உங்களை படிக்க வைக்கிறேன் நீங்கள் எனக்கு செய்யும் ஒரு நல்ல காரியம் என்னவென்றால் நன்றாக படியுங்கள்

ராதா அடுத்து கேள்வியுடன் தயாராக இருந்தார் நீங்கள் அந்த வேலைக்கு சென்றுதான் ஆக வேண்டுமா என்றார்

நிச்சயமாக ஏனென்றால் உங்கள் நால்வரையும் நான் நன்றாக பார்க்க வேண்டும் அல்லவா அதற்காக நான் அங்கு சென்றுதான் ஆகவேண்டும் வெகு விரைவில் வந்து விடுகிறேன் என்றான் இராமன்

எப்பொழுது நீங்கள் புறப்பட வேண்டும் என்று மனைவி ராதா கேட்டார்

இன்னும் ஒரு மாத காலம் உள்ளது என்றார்

சிக்கித் தவித்தது மனது ராதாவிற்கு

ஒரு வழியாக அன்று உறங்க ஆரம்பித்தார்கள் அனைவரும்

விடிந்தது பொழுது தொடர்ந்தது ஞாயிறு அற்புதமான காலைப்பொழுது அது ஒரு ஞாயிற்றுக்கிழமை தினம் என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தார்கள் கதவு தட்டும் சத்தம் கேட்டது யார் என்று தெரியவில்லையே என்று பேசிக்கொண்டே கதவைத் திறந்தான் ராமன் தனது மனைவியின் தம்பி மற்றும் மனைவி வாசலில் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள் வாங்க வாங்க என்று வரவேற்க தடியை உள்ளே அழைத்தார்
ராமன்

குழந்தைகளின் பார்த்தவுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தான் மதன் ஆம் ராதாவின் தம்பி பாசத்திற்காக கட்டுப்பட்டவன் மதனின் மனைவி ஷீலா இருவரும் காதல் திருமணம் புரிந்து கொண்டவர்கள் குழந்தை இல்லை என்ற
ஒரு குறையைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த குறையும் இல்லை

ஒரு புதிர் கேள்வியுடன் காத்திருந்தாள் தேன்குழலி தனது மாமாவும் அத்தையும் வந்து மகிழ்ச்சியில்

(தொடரும்)

ராஜேஷ் கண்ணா
சென்னை
இந்தியா


Recommended For You

About the Author: Editor