
கொரியாவில் மீன்வள மற்றும் பெருங்கடல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற இலங்கை அதிகாரி ஒருவர் குடிபோதையில் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை மீன்பிடி அமைச்சின் மேலமதி செயலாளர், அந்த விமானத்தில் குடித்துவிட்டு மிகவும் மோசமாக நடந்து கொண்டமையினால் மலேசியா கோலாலம்பூரில் வைத்து அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த மேலதிக செயலாளருடன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை பொறியியலாளர் ஒருவரும் அடுத்த விமானத்தில் தனியாக கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாநாடு நேற்று முன்தினம் ஆரம்பமானதுடன் எதிர்வரும் 30ஆம் திகதி வரை பல நாடுகளின் பங்களிப்புடன் கொரியாவில் இடம்பெற்று வருகிறது.
விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அதிகாரி செயற்பட்டதாகவும், அவர் அதிகளவில் மதுபானம் அருந்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அதிகாரி தொடர்பில் தற்போது மலேசியாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் மீன்பிடி அமைச்சிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மீன்பிடி அமைச்சு குறித்த அதிகாரி தொடர்பில் தற்போது வரையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பல லட்சம் ரூபாய் செலவிட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட அதிகாரி ஒருவர் இவ்வாறு செயற்படுவது முழு நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயல் என அமைச்சின் ஏனைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.