
நாட்டில் இடம்பெறும் மாற்றங்களை ஏற்று மக்கள் பயணிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இந்திய ஜனநாயகத்தில் மக்களவைக்கு பெரிய பங்கு உள்ளது. இங்கு பல வரலாறு நிகழ்ந்து இருக்கிறது, இன்னும் பல வரலாறு நிகழும்.தொலைநோக்கு பார்வையுடன் ராஜ்யசபா செயல்பட்டு இருக்கிறது.
இந்திய ஜனநாயகத்தின் இதயமாக ராஜ்ய சபா செயல்பட்டு வருகிறது ராஜ்யசபா எப்போதும் நிலைத்து இருக்க கூடியது. இதற்கு முடிவே கிடையாது.
மக்கள் நாட்டில் நடக்கும் மாற்றங்களை ஏற்க வேண்டும். மாற்றங்களை ஏற்று மக்கள் அதனுடன் பயணிக்க வேண்டும். எல்லோரும் முத்தலாக் மசோதா வெற்றிபெறாது என்று நினைத்தார்கள்.
ஆனால் ராஜ்யசபா முத்தலாக் மசோதாவை வெற்றிபெற வைத்தது. அதுதான் ராஜ்யசபாவின் சிறப்பு.கடந்த 250 கூட்ட தொடர்களில் நிறைய மசோதாக்கள் இங்கு நிறைவேறி இருக்கிறது.
இங்கு நிறைவேறும் மசோதாக்கள்தான் சட்டமாக மாறுகிறது. அதைத்தான் நாம் பின்பற்றுகிறோம். பல அறிஞர்கள், அறிவியல் வல்லுநர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வாகி இருக்கிறார்கள்.
அம்பேத்கார் கூட இதற்கு சிறந்த உதாரணம். இந்தியாவின் பன்முக தன்மைக்கு ராஜ்ய சபாதான் எப்போது உதவுகிறது எனத் தெரிவித்தார்.