
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஓய்வூதியம் இல்லாமல் போய்விடும் என்பதனால் பொதுத் தேர்தலுக்கு செல்ல ஆளும்தரப்பு தயக்கம் காட்டுகின்றனர்.
அவ்வாறு கலைக்கப்பட்டால் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என அறிய முடிகின்றது.
இதேவேளை நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்திலிருந்து விலகுவதா அல்லது நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குத் செல்லலாமா என்பது குறித்த இறுதி முடிவு, அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் வரும் நாட்களில் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.