யாழ் – கிளி , புகையிரத்தில் கலாச்சார சீரழிவு

கிளிநொச்சியில் இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்குச் சென்று யாழ்ப்பாணம் திரும்பும் மாணவர்கள் சிலர் தொடருந்தில் நடந்துகொள்ளும் விதம் பயணிகளுக்கு முகம் சுழிக்க வைக்கிறது.

கிளிநொச்சியில் இயங்கும் இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இளையோருக்கு பல்வேறு தொழில் தகமைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவற்றை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

கொழும்பிலிருந்து காலையில் புறப்பட்டு பிற்பகல் வேளை யாழ்ப்பாணத்திற்கு வரும் தொடருந்தில் கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் யாழ்ப்பாணம் மாணவர்கள் வகுப்புக்கள் நிறைவடைந்து வீடு திரும்புவர்.

இந்த சேவை தொடருந்தில் பெரும்பாலும் அதிகளவான ஆசனங்கள் வெற்றிடமாகக் காணப்படும். அதனைப் பயன்படுத்தி மாணவர்கள் சிலர் நடந்துகொள்ளும் விதம் அதில் பயணிப்போரை முகம் சுழிக்க வைக்கும்.

இவ்வாறான கலாசாரப் பிறழ்வுகளைத் தடுக்க சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறான செயற்பாடுகளைத் தற்போதே தடுக்காவிடின் அவை எல்லைமீறிச் சென்றுவிடும்.

தமிழர் பண்பாட்டைக் காக்க அகில இலங்கை சைவ மகா சபை போன்ற அமைப்புக்கள் இந்த விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.


Recommended For You

About the Author: ஈழவன்