பங்குச் சந்தை விலைகள் அதிகரிப்பு!

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து கொழும்பு பங்குச் சந்தை விலைகள் பெருமளவில் உயர்வடைந்துள்ளது.

அவரது வெற்றியையே தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கொண்டாடுவதால் கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய தினம் 12:30 மணி நிலவரத்தை படி ஆரம்ப வர்த்தகத்தில் பங்கு விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி அனைத்து பங்கு விலைக் குறியீடும் மதியம் 12.30 மணியளவில் 1.59 சதவீதம் அதிகரித்து 6,118.37 ஆக உயர்வடைந்தது, அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ் அண்ட் பி (SAP) 2.03 சதவீதமாகவும் உயர்ந்தது. 3,045.60 வரை ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு தற்போதுவரை 1.7 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அரசியல் நிச்சயமற்ற தன்மையிலிருந்து வெளிவந்துள்ளதாகவும் ஒரு நிலையான அரசாங்கத்தின் சாத்தியம் தனியார் முதலீட்டை உயர்த்தக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் வீழ்ச்சியடைந்திருந்த பங்கு விலைகள் இன்று இரவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor