முன்னாள் ஜனாதிபதி, பிரதமரின் ஒளிப்படங்களை அகற்றியவர் கைது!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின், அரசாங்க அதிபரின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு சுவரில் தொங்கியிருந்த ஒளிப்படங்களை அகற்றிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அரசாங்க அதிபரின் அலுவலகத்திற்குள் இன்று (திங்கட்கிழமை) பகல் நுழைந்த நபர், அங்கிருந்த முன்னாள் ஜனாதிபதி மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பிரதமர் ஆகியோரின் ஒளிப்படங்களை அகற்றியுள்ளார்.

இதன்போது அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்து மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor