ஈரானில் இணையத்தள சேவைகள் முடக்கம்!

ஈரான் நாட்டில் இணையள சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டெஹ்ரானிலும் இதர நகரங்களிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேலோங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்றாவது நாளாக பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில், ஈரானிய மக்களிடையே இணைய தொடர்பைத் துண்டிக்கும் வகையில் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இதுவரை ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஃபார்ஸ் நியூஸ் (Fars News) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor