மீண்டும் இணையும் செல்வராகவன் – தனுஷ்.

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘பட்டாஸ்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இதனை அடுத்து அவர் ‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படமும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தனுஷின் சகோதரரும் பிரபல இயக்குநருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை உறுதி செய்வது போல் தற்போது இந்த படத்திற்காக இரண்டு பாடல்கள் முடித்துவிட்டதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தனுஷ்-செல்வராகவன் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.

தற்போது இந்த படத்தின் திரைக்கதையை எழுதும் பணியில் செல்வராகவன் இருப்பதாகவும் இந்த பணியை அவர் முடித்த பின்னர் நட்சத்திரங்கள் தேர்வு, லொகேஷன் தேர்வு மற்றும் ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விடுவார் என்றும் அநேகமாக அடுத்த வருடம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்