ரணிலுக்கு டீல் அரசியல் புதிதல்ல ..

தேசிய சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பினை ஏற்படுத்தி எதிர்கால தலைமுறையினரை அமெரிக்காவிற்கு அடிபணிய வைக்கும் ஒப்பந்தங்களை எதிர்க்கும் அனைத்து தரப்பினருக்கும் அரசியல் பேதங்களை துறந்து முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை மறைப்பதற்கு எவ்வித அவசியமும் இல்லை. நாடாளுமன்றத்திற்கு பகிரங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவதை ஒருபோதும் நம்ப முடியாது. ஏனெனில் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இரகசியமான ஒப்பந்தங்களை செய்தவருக்கு அமெரிக்காவுடன் இரகசியமாக ஒப்பந்தம் செய்வது ஒன்றும் பெரிய விடயமல்ல.

நாட்டின் இறையான்மையினை விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தங்களை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சோபா உள்ளிட்ட அமெரிக்க ஒப்பந்தங்களுக்கு எதிராக செயற்படும் அனைத்து தரப்பினருக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயார் என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்