மேகாலயாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் தீ.

மேகாலயாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள பழமையான கிறிஸ்தவ ஆலயத்தில் எதிர்பாராதவிதமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில், கிறிஸ்தவ ஆலயத்தை ஒட்டியுள்ள பல வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இதில் கிறிஸ்தவ ஆலயத்தின் அருகே உள்ள வீட்டில் வசித்து வந்த வயதான கணவன்-மனைவி புகைமூட்டத்தில் சிக்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் கிறிஸ்தவ ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்