கோட்டாவுடன் இணையும் அமெரிக்கா.

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட தயாரென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்த தேர்தலில் 13 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.

அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. அந்தவகையில்,

சக்தி வாய்ந்த இறையாண்மை மிக்க இலங்கைக்காக நல்லாட்சி, பொருளாதாரம், மனித உரிமைகள் முன்னேற்றம் மற்றும் சீர்த்திருத்தங்கள் ஊடாக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமை தொடர்பாக அவர் தனது பாராட்டையும்


Recommended For You

About the Author: ஈழவன்