நோகாமல், போற்றுங்கள் சில தமிழ் தலைவர்களை

திரு.டக்கிலஸ் தேவானந்தா, திரு. அங்கஜன், திரு. கருணா அம்மன், திரு. வியாழேந்திரன், திரு. ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரை நோகாமல், போற்றுங்கள்.

அவர்களை கொண்டு திரு. கோட்டாபய அவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழர்க்குப் பெறக்கூடிய உச்சபட்ச அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளும் சாணக்கியத்தைப் பயன்படுத்துங்கள்.

யார் ஆட்சி அமைத்தாலும் ஏனையவர் பலமாகவே இருப்பர். ஆனால் தமிழர் தனித்தொருகட்சியை விரோதக்கட்சியாக முத்திரைகுத்துவதனூடாக, அக்கட்சியின் ஆட்சியின்போது முழு நாட்டத்தையும் அனுபவிக்கும் இனமாகவேயுள்ளனர்.

யுத்தகாலம் தொட்டு இன்றுவரை ஏனையோர் நலமடைந்து, தமிழருக்குசேரவேண்டிய நலன்களையும் இடைமறித்து தாமே அனுபவித்துவந்த வரலாறுகளை மனதிற்கொண்டு, யாருக்கும் துரோகிப்பட்டம் கட்டாது தமிழினத்திற்கு நல்லது சம்பாதிக்கும் வழியை சாணக்கியத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

தமிழர் ஆயிரம் கட்சியில் இருந்தாலும் கொள்கை ஒன்றாக, அக்கொள்கையை ஒற்றுமையாக வென்றெடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகளில் பயணிக்கும் இனமாக விளங்கினால்–தக்கன பிழைக்கும் என்னும் விஞ்ஞானப்படி, தமிழர் நலம்பெறலாம்.

திரு. கோட்டாபய அவர்களுடன் அணிசேர்ந்து நின்ற தமிழ் அரசியற் தலைவர்களே, தமிழர் நலன்களில் அக்கறையோடு செயற்பட்டீர்களேயாயின், காலம் உங்களை வாழ்த்தும்.

சிறையிலிருக்கும் அரசியற்கைதிகளை விடுவிக்க வழிசமைத்தீர்களாயின், அதுவே பெரும்பணிதான். முடிந்தால் முடியாதெதுவும் இல்லை.

Krishnakumar Prathapan

Recommended For You

About the Author: Editor