கஞ்சாச் செடிகளைக் காப்பாற்ற காட்டுத் தீயைத் தொடங்கிய ஆஸ்திரேலியர்!

ஆஸ்திரேலியாவில் தனது கஞ்சாச் செடிகளைக் காப்பாற்றப் புதர்த் தீயை ஆரம்பித்ததாக ஆடவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆடவரின் செயலால் கிழக்குக் கரையில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவியதாக நம்பப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸிலுள்ள எபொர் (Ebor) வட்டாரத்தைச் சேர்ந்தவர் அந்த 51 வயது ஆடவர்.

சுற்றியுள்ள செடிகளை எரிக்கும் ‘backburning’ முறையைக் கடைப்பிடிக்க அவர் முயன்றதாக நம்பப்படுகிறது.

தீ வெகுவாகப் பரவத் தொடங்கியும் அதனை அணைக்க ஆடவர் முயற்சி செய்யவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மூன்று நாள்களுக்குப் பின்னரும் 10,000 ஹெக்டர் அளவுள்ள எபொர் காட்டுத் தீ இன்னும் தொடர்கிறது.


Recommended For You

About the Author: Editor