இராஜினாமா வரிசையில் மலிக் சமரவிக்ரமவும்!!

அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் இராஜினாமா செய்துள்ளனர்.

குறிப்பாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

இதேவேளை இன்று 5 மணிக்கு இடம்பெறும் விசேட கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Recommended For You

About the Author: Editor