அமைச்சர் மனோகணேசன் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்து!

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அமைச்சர் மனோ கணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய நிலவரத்தின்படி கோட்டாபய ராஜபக்ஷ அதிக வாக்குகள் வித்தியசத்தில் முன்னிலை வகிக்கின்றார்.

இந்நிலை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ, “ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எனது வாழ்த்துக்கள். ஜனாதிபதி கோட்டாபய, நம் பொது தாய்நாட்டில், இலங்கையர் அடையாளத்தை பலப்படுத்தி, உயர்த்துவார் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor