ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்திய வங்கதேசம்

உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்தி அசத்தி.

வங்கதேச அணியின் மூத்த வீரரும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன் ஆப்கானிஸ்தான் அணியை ஓட, ஓட விரட்டினார்.

வங்கதேச அணி எளிதாக 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் பேட்டிங்கில் தடுமாறி தோல்வி அடைந்தது.

லிட்டன் தாஸ் சர்ச்சை

லிட்டன் தாஸ் சர்ச்சை

இந்தப் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்கள் எடுத்து சர்ச்சைக்குரிய கேட்ச்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். தமிம் இக்பால் 36 ரன்கள் எடுத்தார்.

ஷகிப் அரைசதம்

ஷகிப் அரைசதம்

ஷகிப் அல் ஹசன் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து, 51 ரன்களில் வெளியேறினார். முஷ்பிகுர் ரஹீம் நீண்ட நேரம் தூணாக களத்தில் நின்று வங்கதேச அணி 250 ரன்கள் எட்டச் செய்தார். அவர் 83 ரன்கள் எடுத்து 49வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

நல்ல இலக்கு

நல்ல இலக்கு

சௌம்யா சர்க்கார் 3, மக்மதுல்லா 27, மொசாடேக் ஹுசைன் 35 ரங்கக் எடுத்தனர். வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. சவுதாம்ப்டன் ஆடுகளத்தில் 250 ரன்களை தாண்டுவதே நல்ல இலக்கு. வங்கதேசம் அதை தாண்டி விட்டதால், போட்டி அந்த அணிக்கு சாதகமாக மாறியது.

நிதானம்

நிதானம்

ஆப்கானிஸ்தான் அணி சேஸிங்கில் மிகவும் நிதானம் காட்டியது. 37 ஓவர்கள் வரை அந்த அணியின் ரன் ரேட் நான்கை தாண்டவில்லை. குலாப்தின் நயிப் 47, ரஹ்மத் ஷா 24, ஹஸ்மதுல்லா 11, அஸ்கார் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முகமது நபி ஏமாற்றம்

முகமது நபி ஏமாற்றம்

இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய முகமது நபி இந்தப் போட்டியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின் சமியுல்லா ஷின்வாரி சிறப்பாக ஆடினாலும், மற்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்த வண்ணம் இருந்தனர்.

தோல்வி

தோல்வி

47 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்கள் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

முதல் இடம்

முதல் இடம்

பேட்டிங்கில் 51, பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தியது என ஷகிப் அல் ஹசன் உச்சகட்ட பார்மில் இருந்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 2019 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷகிப் முதல் இடத்தில் இருக்கிறார்.


Recommended For You

About the Author: Editor