அழகுக்கு அழகு சேர்க்கும் பால்!!!

பால் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருளாகும், இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியவை என்று அனைவருக்குமே தெரியும்.

தினமும் பால் குடித்து வந்தால் எலும்புகள் வலுவாகும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் பாலை தினமும் முகத்தில் தடவி வந்தால் முகமும் அதிக அழகு பெரும் என்று யாருக்காவது தெரியுமா..

அட ஆமாங்க பாலை தினமும் முகத்தில் தடவி சிலநேரம் மசாஜ் செய்தோம் என்றால் முகம் மிகவும் அழகாகவும், பொலிவுடனும், முகம் மிகவும் மென்மையாகவும் இருக்கும்.

அதுமட்டும் இன்றி முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல்கள், அலர்ஜி, வறண்ட சருமம், முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் முக சுருக்கங்கள் ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்த பால் மிகவும் உதவுகிறது.


Recommended For You

About the Author: Editor