தடைகளை தாண்டி வெளியானது சங்கத்தமிழன்.

விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படம் இன்று (சனிக்கிழமை) முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. பணப்பிரச்னையால் மாலைக்காட்சி வரை வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சங்கத்தமிழன். விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

தமிழகம் முழுக்க சங்கத்தமிழன் படம் நேற்று காலைக் காட்சி முதல் மாலைக் காட்சி வரை வெளியாகவில்லை. இதற்கு முன்பு வெளியான படங்கள் தொடர்பான கடன் பிரச்னைகள் தொடர்ந்து நீடித்ததால் திட்டமிட்டபடி நேற்று இரவுக்காட்சி வரை வெளியாகவில்லை. இதனால் படத்துக்கு முன்பதிவு செய்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்.

மேலும், படத்தை திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கு வெளியிட திருநெல்வேலி நீதிமன்றம் தடை விதித்தது.

விஜய் சேதுபதி நடித்த படத்தின் வெளியீடு தாமதமாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த 96, சிந்துபாத் படங்களும் வெளியீட்டின் போது இதுபோன்ற தாமதங்களை எதிர்கொண்டது.

எனினும் ஒருவழியாக, நேற்று மாலையில் பணப்பிரச்னைகள் தீர்க்கப்பட்டதால் சென்னையில் மட்டும் இரவுக்காட்சி வெளியிடப்பட்டது. விருகம்பாக்கத்தில் உள்ள ஐனாக்ஸ் மற்றும் சில திரையரங்குகளில் நேற்றிரவு படம் வெளியானமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்