
கோவா மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கோவா மாநிலத்தில் கடற்படையின் மிக்-29கே ரக போர் விமானத்தில் 2 விமானிகள் இன்று (சனிக்கிழமை) பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
விமான தளத்தில் இருந்து புறப்பட்ட, விமானம் சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் விமானிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.