தர்பார் டார்கெட் 70 கோடி – ஏலம் ஆரம்பம்!

பொங்கல் பண்டிகைக்கு முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ரஜினிகாந்த் விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் படங்களை முதல் பிரதி அடிப்படையில் அல்லது தமிழ்நாடு உரிமையை மட்டும் வாங்கி வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது.

அடுத்த வருடம் தொடக்கத்தில் வெளிவரக்கூடிய பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் தர்பார் முக்கியமான படம். அதன் வியாபாரத்தை லைகா நிறுவனம் இப்போது தொடங்கி இருக்கிறது. தர்பார் படத்தின் தமிழக உரிமையை 80 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்வதற்கு லைகா திட்டமிட்டுள்ளது.

அதனடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது ஏரியாவுக்கு விலை நிர்ணயம் செய்து முன்னணி விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

சென்னை நகரம் -7 கோடி செங்கல்பட்டு- 15 கோடி திருச்சி – 7.5 கோடி மதுரை – 9 கோடி நெல்லை- 4 கோடி சேலம் – 6.5 கோடி கோவை – 12 கோடி வட ஆற்காடு, தென் ஆற்காடு – 9 கோடி கேரளா- 6 கோடி கர்நாடகா – 11கோடி ரூபாய் மேலே குறிப்பிட்டுள்ளபடி லைகா தரப்பில் விலை கூறப்பட்டு, படம் வாங்க விரும்பி அலுவலகம் வருகின்ற விநியோகஸ்தர்களிடம், அவர்கள் ஏற்கனவே என்ன படம் வாங்கி ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்கிற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல் வேலை தேடி வரும் இளைஞர்களிடம் அலுவலகங்களில் நேர்முகத்தேர்வு நடத்துவது போன்று, லைகா நிறுவன அதிகாரிகளால் விநியோகஸ்தர்களிடம் நேர்முகத் தேர்வுகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஐயா சாமி உங்க படமே வேண்டாம் என்று தலைதெறிக்க ஓடி விடுகின்றனர் விநியோகஸ்தர்கள் என்கின்றனர்.

என்ன காரணம் என்று விசாரித்த போது “சினிமா தயாரிப்பு, சினிமா வியாபாரம் போன்ற துறைகளில் அனுபவம் மிக்கவர்கள் இப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டார்கள். தொலைக்காட்சி ஊடகங்களில் வேலை பார்த்தவர்கள் சினிமா வியாபாரத்தை தீர்மானிக்கும் தலைமை பொறுப்பில் இருந்தால் இதுபோன்ற காமெடிகள் அரங்கேறுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

அதுதான் லைகா நிறுவனத்தில் தற்போது நடந்து வருகிறது” என்கின்றனர் அதே நேரம் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ், உயிர் படத்தை தயாரித்த பாலாஜி, மீசைய முறுக்கு படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்ட ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம், பிகில் படத்தின் தமிழக உரிமையை வாங்கிய ஸ்கீரின் சென் நிறுவனம் ஆகியோர் தர்பார் படத்தின் தமிழக உரிமையை 70 கோடி ரூபாய்க்கு குறைவாக வாங்குவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

இவர்கள் மட்டுமல்லாது ஏழுக்கும் மேற்பட்ட புதிய பழைய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தர்பார் படத்தை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர்.

70 கோடி ரூபாய் அளவுக்கு படத்தை வாங்க விரும்பும் நிறுவனத்திற்கு படத்தின் தமிழக உரிமையை லைகா நிறுவனம் வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரம் படத்தை வாங்குகின்ற நிறுவனம் நிதி நெருக்கடியில் இல்லாத நிறுவனமாகவும், தமிழகம் முழுமையும் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதற்கான ஆளுமைமிக்க நிறுவனமாக அல்லது தனி நபராக இருக்க வேண்டும் என்று லைகா விரும்புவதாகத் தெரிகிறது.


Recommended For You

About the Author: Editor