அச்சமின்றி வாக்களியுங்கள்

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் நாளை சனிக்கிழமை ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு வாக்களிக்குமாறு தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

பகிரங்கமாக நாளைய தினம் வன்னி மற்றும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி தமது வாக்குகளை பதிவு செய்யுமாறு அந்த நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களும் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களும் அடங்குகின்றன. நாளைக் காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்