வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லுதல் மற்றும் அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2845 மத்திய நிலையங்கள் ஊடாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் மூன்று இலட்சம் அரச அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,59,92,096 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மாலை 5 மணி வரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்