சிவகார்த்திகேயனின் படத்திற்கு தடை

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களை தயாரித்த 24ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜாடி, ஆர்எஸ் பிலிம்ஸ் என்னும் நிறுவனத்திடம் இருந்து கடந்த ஆண்டு ரூ.10 கோடி கடனாக பெற்றார். ஆனால் அவர் இதற்கான வட்டி மற்றும் அசலை திரும்ப செலுத்தவில்லை.

இதுகுறித்து டிஆர்எஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  தங்களுக்கு தரவேண்டிய ரூ.10 கோடி கடனை திருப்பி தராததால் ‘ஹீரோ’ படத்திற்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கில் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி 24ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் மேலும் இரண்டு படங்களின் ரிலீசுக்கும் நீதிபதி தடைவிதித்தார்.

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது திடீரென இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது படக்குழுவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


Recommended For You

About the Author: Editor